தொண்டையில் முள்ளாக தைத்து, எடுக்கவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிப்பது போனற ஒரு வதையை, வலியை, வேதனையை நீண்ட நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன்.
நமது சமுதாயத்தில் நிலவும் பல அவலங்களைத்தான் கூறுகிறேன்.இவை என்னை பாதிப்பதுபோல் இன்னும் பலரையும் பாதிப்பது எனக்கு நன்றாகவே தெரியும்.ஆனால் இவற்றை சீரமைக்க, சரி செய்ய எந்த தனி மனிதனாலும் இயலாது.
அரசியல் அமைப்புகளோ, அதிகாரத்தில் இருப்பவர்களோ நினைத்தால் - விரும்பினால் -நிச்சயம் மாற்றலாம். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள் ! ஏனென்றால் முக்கால்வாசிஅவலங்களுக்கு அவர்களே தானே காரணம் !!
நான் தனி மனிதனாக எதையும் செய்ய முனைந்தால் - என் இருப்பே காணாமல் போய்விடும்.சினிமா ஹீரோக்களால் மட்டுமே முடியக்கூடிய காரியம் அது !
எனவே என்னால் இயன்றதை செய்ய முயல்கின்றேன். அது தான் -creating public opinion -இந்த அவலங்களை வெளிப்படுத்தி அவை பற்றிய சிந்தனையை தூண்டுவது.
என்னுடைய நோக்கம் வசை பாடுவது அல்ல.நாக்கை பிடிங்கிக்கொள்ளும் வண்ணம் நாலு வார்த்தைகள் கேட்டாலாவது ரோஷம் வந்துநல்லது எதாவது செய்ய மாட்டார்களா என்ற ஏக்கம் தான். எனவே -கடுமையான வார்த்தைகளுக்காக என்னை மன்னியுங்கள்.
சொந்த பெயர், விலாசத்தோடு இவற்றை எழுதினால் அவை இரண்டுமே காணாமல் போய் விடுமேஎன்கிற எச்சரிக்கை உணர்வினால் நான் போட்டுக்கொண்டுள்ள முகமூடி தான் இந்த"சவுக்கடி சந்திரகாந்தா". நேரம், காலம் வரும்போது முகவரியுடன் வருகிறேன். அதுவரை -படிப்படியாக பல விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். நீங்கள் படிப்பதை உங்களுக்குத்தெரிந்தமற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் - தொடர்பு வலை விரிந்தால் - நமது எண்ணங்கள் நிறைவேறும்வழி பிறக்கலாம். வாழ்த்துக்களுடனும் - எதிர்பார்ப்புக்களுடனும் -
Thursday, February 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment