1) பள்ளியோ பள்ளி ! கொள்ளையோ
கொள்ளை !!
கொள்ளை !!
சென்னையில் புகழ் பெற்ற பள்ளி -
சமீபத்தில் பொன் விழா கொண்டாடிய பள்ளி -
இதைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எரிச்சல்
தான் மிஞ்சும். ஆனால் வேறு வழி இல்லை -
எழுதித்தான் ஆக வேண்டும். ஏன் என்றால்
இந்த அவலததிற்கு காரணம் பள்ளியின்
சொந்தக்காரர்களும் நிர்வாகிகளும் மட்டும்
அல்ல - நீங்களும் நானும் இதன் பின்னால்
அட்மிஷன் வேண்டி அலைகின்ற
பெற்றோர்களும் கூடத்தான்.பள்ளியின்
சொந்தக்காரர்கள் முதல் குற்றவாளி என்றால்,
இங்கே - இந்த பள்ளியில் தன் குழந்தையை
சேர்க்க அதிகாலை 4 மணி முதலே
காத்திருந்து விண்ணப்பம் வாங்கிய முன்னாள்
- இந்நாள் பெற்றோர்கள் தான் இரண்டாவது
குற்றவாளிகள்.
சமீபத்தில் பொன் விழா கொண்டாடிய பள்ளி -
இதைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எரிச்சல்
தான் மிஞ்சும். ஆனால் வேறு வழி இல்லை -
எழுதித்தான் ஆக வேண்டும். ஏன் என்றால்
இந்த அவலததிற்கு காரணம் பள்ளியின்
சொந்தக்காரர்களும் நிர்வாகிகளும் மட்டும்
அல்ல - நீங்களும் நானும் இதன் பின்னால்
அட்மிஷன் வேண்டி அலைகின்ற
பெற்றோர்களும் கூடத்தான்.பள்ளியின்
சொந்தக்காரர்கள் முதல் குற்றவாளி என்றால்,
இங்கே - இந்த பள்ளியில் தன் குழந்தையை
சேர்க்க அதிகாலை 4 மணி முதலே
காத்திருந்து விண்ணப்பம் வாங்கிய முன்னாள்
- இந்நாள் பெற்றோர்கள் தான் இரண்டாவது
குற்றவாளிகள்.
2) ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் -
அத்தனையும் பப்ளிசிடிக்காக தான் !!
சமீபத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் உண்மையை
தோலுரித்து காட்டினாலும் மக்கள் இன்னும்
சென்னையின் முதல்தர பள்ளி என்கிற
மாயச்சொற்களிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.வயதுக்கு சற்றும் பொருந்தாத ஒப்பனையுடன்
மேடையில் தோன்றும் 80 வயதை தாண்டிய
டீன் / டைரக்டர் (மேல்நிலைப்பள்ளியில் டீன்/
டைரக்டர் என்ற பதவியை -இதுவரை -
இவரைத்தவிர வேறு யாரும் நினைத்துக்கூட
பார்த்திருக்க மாட்டார்கள் என்பது வேறு
விஷயம் !) (எல்லா பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கும் ரிடையர்மெண்ட் வயது
என்று ஒன்று உண்டு - இவர் அகராதியில்
அந்த வார்த்தையே கிடையாது !! அல்லது
ரிடையர்மெண்ட்- க்கு பதிலாக
கண்டுபிடிக்கப்பட்ட பதவிகள் தான் இவை
போல் இருக்கிறது.) பிறர் தன்னை பாராட்ட
வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி
நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன ! தானே
மேடை அமைத்து, தன்னையும் தங்கள்
பள்ளியையும் புகழ வேண்டும்
என்பதற்காகவே குறிப்பிட்ட பெரிய
மனிதர்களை விழாவிற்கு அழைப்பது
வாடிக்கை ஆகி விட்டது. ஹிண்டு ஆசிரியர்
ராம் அவர்களை கூப்பிட்டால் மறுநாள்
காலை ஹிண்டு பத்திரிக்கையில் கலர்
போட்டோவுடன் செய்தி பிரசுரம் ஆவது
உறுதி.
3) பாவம் -பெற்றோர்கள் !!
சாதாரணமாக எல்லா பள்ளிகளிலும் என்ன
வழக்கம் ? ஆண்டு விழா என்றாலும் சரி
பள்ளி சம்பந்தப்பட்ட வேறு எந்த நிகழ்ச்சி
என்றாலும் சரி பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் பெற்றோர்கள் தானே முதலில்
அழைக்கப்படுவார்கள் ? விழாக்கள்
பெரும்பாலும் பள்ளி மைதானம்/மேடையில்
தானே நடக்கும்? ஆனால் இந்த பள்ளி
நிகழ்ச்சிகள் மட்டும் எப்போதும் காமராஜர்
அரங்கத்தில் VIP க்கள் முன்னிலையில் தான்
நடக்கும். நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை
ஆசிரியர்கள் (நிருபர்கள் அல்ல! )
/தொலைக்காட்சி நிர்வாகிகள்
முன்னாள்/இந்நாள் சினிமா பிரபலஙகள்
(நிரந்தர அழைப்பாளரான திருமதி
வைஜயந்திமாலாஅடங்கலாக ) லயன்ஸ் கிளப்
/ரோட்டரி கிளப்நிர்வாகிகள் உபயோகமுள்ள உள்ளூர்/வெளியூர்
பெரிய மனிதர்கள் ஆகியோர் முதலில்
விசேஷமாக அழைக்கப்பட்டு அதன் பிறகு
இடம் இருந்தால், பெற்றோர்களில் யாராவது
ஒருவர் மட்டும் வரலாம் - அதுவும் கையில்
அழைப்பிதழுடன் குறைந்தது அரை மணி
நேரம் முன்பாகவே வந்தால் தான்
அனுமதிக்கப்படுவார்கள். இந்த விவரஙகள்
பெற்றோர்களுக்கு கொடுக்கப்படும்
அழைப்பிதழ்/நோட்டீஸிலேயே
தெரிவிக்கப்பட்டு இருக்கும். இதற்கு பிறகும்
அங்கு போகும் பெற்றோர்களுக்கு என்ன
மரியாதை கிடைக்கும் என்பதை யாரும்
யூகித்துக்கொள்ளலாம். இந்த பள்ளி நடத்தும்
எந்த நிகழ்ச்சிக்கும் மாணவர்களின் அம்மா
அப்பா இருவரும் போகவே முடியாது.
இருவரில் யாராவது ஒருவர் மட்டுமே வரலாம்
என்று அழைப்பிதழிலேயே கண்டிப்பாக போட்டு
விடுகிறார்கள். அங்கே போய்
அவமானப்படுவதை தவிர்க்க அவர்களே ஒரு
சந்தர்ப்பம் கொடுக்கிறார்கள்.
வழக்கம் ? ஆண்டு விழா என்றாலும் சரி
பள்ளி சம்பந்தப்பட்ட வேறு எந்த நிகழ்ச்சி
என்றாலும் சரி பள்ளியில் படிக்கும்
மாணவர்களின் பெற்றோர்கள் தானே முதலில்
அழைக்கப்படுவார்கள் ? விழாக்கள்
பெரும்பாலும் பள்ளி மைதானம்/மேடையில்
தானே நடக்கும்? ஆனால் இந்த பள்ளி
நிகழ்ச்சிகள் மட்டும் எப்போதும் காமராஜர்
அரங்கத்தில் VIP க்கள் முன்னிலையில் தான்
நடக்கும். நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை
ஆசிரியர்கள் (நிருபர்கள் அல்ல! )
/தொலைக்காட்சி நிர்வாகிகள்
முன்னாள்/இந்நாள் சினிமா பிரபலஙகள்
(நிரந்தர அழைப்பாளரான திருமதி
வைஜயந்திமாலாஅடங்கலாக ) லயன்ஸ் கிளப்
/ரோட்டரி கிளப்நிர்வாகிகள் உபயோகமுள்ள உள்ளூர்/வெளியூர்
பெரிய மனிதர்கள் ஆகியோர் முதலில்
விசேஷமாக அழைக்கப்பட்டு அதன் பிறகு
இடம் இருந்தால், பெற்றோர்களில் யாராவது
ஒருவர் மட்டும் வரலாம் - அதுவும் கையில்
அழைப்பிதழுடன் குறைந்தது அரை மணி
நேரம் முன்பாகவே வந்தால் தான்
அனுமதிக்கப்படுவார்கள். இந்த விவரஙகள்
பெற்றோர்களுக்கு கொடுக்கப்படும்
அழைப்பிதழ்/நோட்டீஸிலேயே
தெரிவிக்கப்பட்டு இருக்கும். இதற்கு பிறகும்
அங்கு போகும் பெற்றோர்களுக்கு என்ன
மரியாதை கிடைக்கும் என்பதை யாரும்
யூகித்துக்கொள்ளலாம். இந்த பள்ளி நடத்தும்
எந்த நிகழ்ச்சிக்கும் மாணவர்களின் அம்மா
அப்பா இருவரும் போகவே முடியாது.
இருவரில் யாராவது ஒருவர் மட்டுமே வரலாம்
என்று அழைப்பிதழிலேயே கண்டிப்பாக போட்டு
விடுகிறார்கள். அங்கே போய்
அவமானப்படுவதை தவிர்க்க அவர்களே ஒரு
சந்தர்ப்பம் கொடுக்கிறார்கள்.
4) அந்த நாள் ஞாபகம் வந்ததே - வந்ததே !!
இந்த பள்ளியின் பெயரை தாங்கி நிற்கும்
திருமதி பத்மா சேஷாத்ரி யார் என்பது
இன்றைய பெற்றோர் யாருக்காவதுதெரியுமா?
அவரைப்பற்றி யாராவது பேசுவது உண்டா ?ஒரு காலத்தில் இந்த பள்ளி சிறந்த முன்
உதாரணமாக திகழ்ந்தது உண்டு. சேவை
மனப்பான்மையுடன் வளர்ந்தது உண்டு. ஆனால்
வளர்ந்த பிறகு ? புகழ் அடைந்த பிறகு ?
நல்லவர்கள் எல்லாரும் பெரும்பாலும் போன
பிறகு இன்றைய நிலை என்ன ? எப்போது
புகுந்தது சுயநலமும், வியாபார நோக்கும் ?
எல்லா பெருமையும் ஒருவரையே சாரும் -
அவர் தான் இந்நாள் டீன்/டைரக்டர். நிர்வாகம்
முழுவதும் ஒரு குடும்பத்தின் கையிலேயே !
ஆடிட்டரில் இருந்து உதவி தலைமை ஆசிரியர்
வரை அனைவருமே ஒரு குடும்பத்தை
சேர்ந்தவர்கள்.
5) ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா ?எண்ணிப் பாருங்க ! அம்மா எண்ணிப்பாருங்க !! அய்யா எண்ணிப்பாருங்க !!!
பிரைவேட் லிமிடட் கம்பெனியாக திகழும்
இந்த பள்ளியின் இன்றைய நிதி நிலைமையை
பற்றி வெளியார் யாருக்காவது தெரியுமா?
இவர்கள் பெயரில் எவ்வளவு கோடி பணம்
இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா ?
இவர்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளியின்
மூலம் சம்பாதிப்பது எவ்வளவு கோடி ? ப்ரி கேஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார்
8000 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில்
குறைந்த பட்ச வருடாந்திர கல்வி கட்டணம் -
annual tuition fees - ரூபாய் 11,240/-(எல்கேஜி)
அதிக பட்சம் ரூபாய் 14,665/-. எல்கேஜி
வகுப்பிற்கான நுழைவு கட்டணம் (அட்மிஷன்
பீஸ் ) ரூபாய் 25,000/- தனி.
சராசரியாக ஒரு மாணவருக்கு ஒரு
ஆண்டுக்கு 12000 என்று
வைத்துக்கொணடாலும் ஒரு மாதத்திற்கு 1000
ரூபாய் என்றாகிறது. ஒரு வகுப்பில் 25
மாணவர்கள் என்று வைத்துக்கொண்டாலும்
ஒரு மாதத்திற்கு ஒரு வகுப்பிற்கு
சராசரியாக 25,000 வசூலாகிறது. கேஜி
வகுப்புகளில் ஒரு ஆசிரியர், ஒரு ஆயா
இவர்களின் அதிக பட்ச மொத்த சம்பளம் ரூபாய் 10,000/- தான். மேல் வகுப்புகளில்
ஆசிரியர் மட்டும் தான். ஆயா கிடையாது.
இங்கும் ஒரு ஆசிரியருக்கு 10,000 ரூபாய்
சம்பளம் என்றே வைத்துக்கொள்வோம்.
(உண்மையில் கீழ் வகுப்புகளில் அதைவிட
மிகக்குறைவு.) ஆக ஒவ்வொரு வகுப்பிலும்
வசூல் ஆகும் தொகை 25,000/-. செலவு சுமார்
10,000/- மீதி 15,000/-. 25
மாணவர்களிடமிருந்து லாபம் சுமார் 15,000/-
என்றால் ஒரு மாணவரிடமிருந்து சராசரியாக
பெறும் லாபம் 15,000 /25 = ரூபாய் 600/-.ஒரு மாணவரிடமிருந்து கிடைக்கும் லாபம்
ரூ.600/- என்றால் 8000 மாணவர்களிடமிருந்து
? 600 x 8000 =48,00,000/- (48 lakhs) - இது
ஒரு மாதத்திற்கு.இதுவே ஒரு வருடத்திற்கு ? 48 x12 =576
லட்சங்கள். ஆமாம் 5 கோடியே 76 லட்சம்
தான் !! இதில் 76 லட்சத்தை இதர
செலவுகளுக்காக (லேபரேட்டரி, விளையாட்டு,
இசை போன்ற பயிற்சிகள், மற்ற நிர்வாக
செலவினங்களுக்காக) ஒதுக்கி விட்டாலும்
நிகர லாபம் ஆண்டுக்கு 5 கோடி.இதைத்தவிர ப்ரி கேஜி வகுப்புக்களில்
சேர்ப்பதற்காக தனியே பெறப்படும் அட்மிஷன்
தொகை ஒரு குழந்தைக்கு ரூபாய் 25,000/-
வீதம் ஒரு ஆண்டுக்கு 250 குழந்தைகளுக்கு -
25,000 x 250 = 62,50,000/- ஆமாம் 62.5
லட்சங்கள் மட்டுமே. ஆக மொத்தம்
ஆண்டுக்கு நிகர லாபம் - சுமார் 5 கோடியே
62.5 லட்சங்கள்.
இந்த பள்ளியின் இன்றைய நிதி நிலைமையை
பற்றி வெளியார் யாருக்காவது தெரியுமா?
இவர்கள் பெயரில் எவ்வளவு கோடி பணம்
இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா ?
இவர்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளியின்
மூலம் சம்பாதிப்பது எவ்வளவு கோடி ? ப்ரி கேஜி முதல் 12ம் வகுப்பு வரை சுமார்
8000 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில்
குறைந்த பட்ச வருடாந்திர கல்வி கட்டணம் -
annual tuition fees - ரூபாய் 11,240/-(எல்கேஜி)
அதிக பட்சம் ரூபாய் 14,665/-. எல்கேஜி
வகுப்பிற்கான நுழைவு கட்டணம் (அட்மிஷன்
பீஸ் ) ரூபாய் 25,000/- தனி.
சராசரியாக ஒரு மாணவருக்கு ஒரு
ஆண்டுக்கு 12000 என்று
வைத்துக்கொணடாலும் ஒரு மாதத்திற்கு 1000
ரூபாய் என்றாகிறது. ஒரு வகுப்பில் 25
மாணவர்கள் என்று வைத்துக்கொண்டாலும்
ஒரு மாதத்திற்கு ஒரு வகுப்பிற்கு
சராசரியாக 25,000 வசூலாகிறது. கேஜி
வகுப்புகளில் ஒரு ஆசிரியர், ஒரு ஆயா
இவர்களின் அதிக பட்ச மொத்த சம்பளம் ரூபாய் 10,000/- தான். மேல் வகுப்புகளில்
ஆசிரியர் மட்டும் தான். ஆயா கிடையாது.
இங்கும் ஒரு ஆசிரியருக்கு 10,000 ரூபாய்
சம்பளம் என்றே வைத்துக்கொள்வோம்.
(உண்மையில் கீழ் வகுப்புகளில் அதைவிட
மிகக்குறைவு.) ஆக ஒவ்வொரு வகுப்பிலும்
வசூல் ஆகும் தொகை 25,000/-. செலவு சுமார்
10,000/- மீதி 15,000/-. 25
மாணவர்களிடமிருந்து லாபம் சுமார் 15,000/-
என்றால் ஒரு மாணவரிடமிருந்து சராசரியாக
பெறும் லாபம் 15,000 /25 = ரூபாய் 600/-.ஒரு மாணவரிடமிருந்து கிடைக்கும் லாபம்
ரூ.600/- என்றால் 8000 மாணவர்களிடமிருந்து
? 600 x 8000 =48,00,000/- (48 lakhs) - இது
ஒரு மாதத்திற்கு.இதுவே ஒரு வருடத்திற்கு ? 48 x12 =576
லட்சங்கள். ஆமாம் 5 கோடியே 76 லட்சம்
தான் !! இதில் 76 லட்சத்தை இதர
செலவுகளுக்காக (லேபரேட்டரி, விளையாட்டு,
இசை போன்ற பயிற்சிகள், மற்ற நிர்வாக
செலவினங்களுக்காக) ஒதுக்கி விட்டாலும்
நிகர லாபம் ஆண்டுக்கு 5 கோடி.இதைத்தவிர ப்ரி கேஜி வகுப்புக்களில்
சேர்ப்பதற்காக தனியே பெறப்படும் அட்மிஷன்
தொகை ஒரு குழந்தைக்கு ரூபாய் 25,000/-
வீதம் ஒரு ஆண்டுக்கு 250 குழந்தைகளுக்கு -
25,000 x 250 = 62,50,000/- ஆமாம் 62.5
லட்சங்கள் மட்டுமே. ஆக மொத்தம்
ஆண்டுக்கு நிகர லாபம் - சுமார் 5 கோடியே
62.5 லட்சங்கள்.
6) இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே ?
ஆண்டுதோறும் பெறப்படும் இவ்வளவு பெரிய
தொகை எப்படி செலவழிக்கப்படுகிறது -
எங்கெங்கே போகின்றது என்பது முன்னாள் /
இந்நாள் மாணவர்களின் பெற்றோர்களுக்கோ,
பொதுமக்களுக்கோ, பத்திரிக்கையாளர்களுக்கோ
தெரியுமா ? இது சமூக சேவையா ?
கல்விப்பணியா ? இல்லை முதல் போடாத
வியாபாரமா ? தனியார் நிறுவனமா, குடும்ப
நிறுவனமா? இல்லை பங்கு நிறுவனமா ?இதில் பங்குதாரர்கள் யார் யார் என்று
யாருக்காவது தெரியுமா ? அதி அற்புதமான
தொண்டு என்று இந்த பள்ளியினர் போடும்
மேடைகளில் கூப்பிடும்போது எல்லாம் வந்து
சான்றிதழ் தந்து விட்டு செல்லும் பெரிய
மனிதர்கள் யாராவது இதைப்பற்றி
அறிவார்களா ? யோசித்திருக்கிறார்களா ?
7)அய்யோ பாவம் - பயிற்சி ஆசிரியை
பெண்களும் பாக்கெட் மணி தாய்மார்களும் !!
இங்கு ஆசிரியர்களை நியமிக்கும் விதமே
பெரிய கூத்து. மிகச்சிலர் மட்டுமே
அறிந்திருக்கக்கூடிய செப்படி வித்தை. இங்கு
பணிபுரியும் நிரந்தர, தகுதி பெற்ற
ஆசிரியர்கள் மிகவும் குறைவே !
முக்கால்வாசி வகுப்புகளில் வருடத்தில் மூன்று
அல்லது நான்கு ஆசிரியர்கள் வரை மாறுவது
பெரும்பாலும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும்
சில பெற்றோர்களுக்கும் மட்டுமே தெரிந்த
விஷயம். இவர்களின் தற்காலிக ஆசிரியர்கள்
யார் தெரியுமா ? பள்ளி மாணவர்களின்
பட்டதாரி தாய்மார்களையே ஒரு நாளைக்கு
ரூபாய் 100/- என்கிற அளவில் தின
சம்பளத்திற்கு நியமிக்கும் அதிசயத்தை இங்கு
மட்டுமே பார்க்கலாம்.ஆசிரியர்கள் பற்றாக்குறை
ஏற்படும்போதெல்லாம் பட்டதாரி தாய்மார்களை
அழைத்து தெளிவாக கூறி விடுகின்றார்கள்.
உங்களுக்கு எவ்வளவு நாள் முடியுமோ
அவ்வளவு நாள் வேலை பார்க்கலாம்.
அன்றன்று மாலையே (பாக்கெட் மணியாக ?)
ரூ.100/- சம்பளம் வாங்கி கொள்ளலாம் என்று.
ஒரு வகுப்பில் மாணவர்கள் ஒரு ஆண்டிலேயே
குறைந்தது 3 ஆசிரியர்களையாவது பார்ப்பது
சகஜமான அனுபவம்.
இன்னும் ஒருவித சம்பாதிப்பும் இங்கு
நடக்கிறது. கிண்டர்கார்டன் டீச்சர் ட்ரெயினிங்ஸ்கீம் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள்.
கிண்டர்கார்டன் பள்ளிகளையே அரசாங்கம்
அங்கீகரிக்கவில்லை. இதில்
பயிற்சிப்பள்ளிகளை எங்கே அங்கீகரிப்பது ?
எனவே இவை அங்கீகரிக்கப்படாத பயிற்சி
தான். இதில் சேர்ந்தால் நர்ஸரி டீச்சர் வேலை
கிடைக்கும் என்று நம்பி 10 - 12ஆம் வகுப்பு
வரை படித்த பெண்கள் நிறைய பேர்கள்
சேருகின்றார்கள். அங்கீகாரம் இல்லாத இந்த
பயிற்சியில் சேர வரும் பெண்களிடம்
பணத்தையும் வாங்கிக்கொண்டு, அவர்களை
வைத்துக்கொண்டே ப்ரி கேஜி, எல்கேஜி,
யூகேஜி வகுப்புகளையும் சமாளிக்கிறார்கள்.
8) எட்டடி பாட்டியும் பதினாறு அடி பேத்தியும் !!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி
பாயும் என்பார்கள். பாட்டியே இப்படி என்றால் பேத்தி எப்படி இருப்பார் ? இந்த பள்ளியின்
வருமானம் பத்தாது என்று பேத்தி புதிதாக
இன்னொரு பள்ளி ஆரம்பித்து இருக்கிறார்.
பெயரே Mrs.YGP school !பாட்டி பள்ளியில்
இடம் கிடைக்காத துரதிருஷ்டசாலி(?)கள்
அங்கே அனுப்பப்படுகிறார்கள் !
ஆரம்பத்திலேயே இங்கே புத்திசாலித்தனம்
கொடி கட்டி பறக்கிறது. இங்கே சேருபவர்கள்
அனைவரும் பள்ளி ஏற்பாடு செய்யும்
வாகனங்களில் தான் வர வேண்டுமாம். இந்த
கண்டிஷனை வெளிப்படையாகவே அறிவித்து
இருக்கிறார்கள் !! நம் ஊரில் ஏமாளிகளுக்கு
என்ன பஞ்சம் ?
9) என்று தணியும் இந்த அட்மிஷன் மோகம் ?
இப்படி இருக்கிறது இவர்கள் கதை. ஆனால்
விஷயம் தெரியாத பெற்றோர்கள் இப்போதும்
இவர்கள் பின்னால் அட்மிஷன் கேட்டு
ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே
சேர்ந்து, விஷயமும் தெரிந்த, பெற்றோர்
ஊமை கனவு கண்டது போல் வெளியே
சொல்ல முடியாமல் விழித்துக்கொண்டு
இருக்கிறார்கள். பணத்தை கொட்டி ஊரில்
பெத்த பள்ளி என்று பெயர் எடுத்திருக்கும்
பள்ளியில் அட்மிஷன் வாங்கிய பிறகு வேறு
என்ன செய்ய முடியும் ? அப்படி
விழித்துக்கொண்டு இருக்கும் ஒருவரின்
சார்பில் தான் நான் இதை எல்லாம்
எழுதுகிறேன்.
10) விவரங்கள் கிடைக்குமா ?
i) இந்த பள்ளிகளின் வருடாந்திர வரவு செலவு என்ன ?
ii) எந்த எந்த வகைகளில் வரவும் செலவும் காட்டப்பட்டு இருக்கிறது ?
iii) எங்கெங்கு எல்லாம் சொத்து இருக்கிறது ?
அவை யார் யார் பெயரில், எப்போது
எல்லாம் வாங்கப்பட்டு இருக்கிறது ?
அவை யார் யார் பெயரில், எப்போது
எல்லாம் வாங்கப்பட்டு இருக்கிறது ?
iv) டீன்- க்கும், மற்ற பொறுப்புகளில்
இருப்பவர்களுக்கும் சம்பளம்/கவுரவ ஊதியம்,
படி வகைகள் எதாவது உண்டா ?
இருப்பவர்களுக்கும் சம்பளம்/கவுரவ ஊதியம்,
படி வகைகள் எதாவது உண்டா ?
v) இல்லை இனாமாகவே உழைக்கிறார்களா ?
vi) பள்ளி ட்ரஸ்டில் எந்தெந்த பொறுப்புகளில்
உறவினர்கள்/குடும்பத்து உறுப்பினர்களே
இருக்கிறார்கள் ?
உறவினர்கள்/குடும்பத்து உறுப்பினர்களே
இருக்கிறார்கள் ?
vii) ட்ரஸ்டு உறுப்பினர்கள் யார் யார் ?
viii) இப்போது இவர்கள் செய்வது சமூக
சேவையா ? கல்விப்பணியா ? அல்லது
வியாபாரமா?
சேவையா ? கல்விப்பணியா ? அல்லது
வியாபாரமா?
ix) இந்த பள்ளியின் தற்போதைய மொத்த
சொத்து மதிப்பு எவ்வளவு ?
சொத்து மதிப்பு எவ்வளவு ?
x) மாணவர்களிடம் ஏன் இவ்வளவு அதிகமாக fees வாங்குகிறார்கள் ?
மேற்கண்ட விவரங்களை வெளிப்படையாக
வெளியிட முடியுமா? ஒரு தொண்டு
நிறுவனத்தில் ஏன் இத்தனை மர்ம
முடிச்சுக்கள் ?
11) கேள்விக்கு விடை என்ன ? பதில் எப்படி ?
ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இந்த
கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் என்று
நாம் எதிர்பார்க்கவில்லை.செய்வது வியாபாரம் தான் என்று
வெளிப்படையாகவே அறிவித்து விட்டால் நாம்
எதையுமே கேட்கப்போவது இல்லை.
பெற்றோர்களும் இது வியாபாரம் தான்
என்பதை புரிந்துகொண்டு அதில் ஆர்வம்
இருப்பவர்கள் மட்டும் சேருவார்கள் ! இதில்
ஏமாற்றம் இருக்காது.
இங்கே ஏதோ பெரிய சமூக சேவை -
சுயநலம் கருதாத கல்விப்பணி - மிகப்பெரிய
சமுதாய நோக்கோடு நடைபெற்றுக்கொண்டு
இருக்கிறது என்று நம்பி இவர்கள் வலையில்
விழும் அப்பாவி பெற்றோர்களின்
நன்மைக்காகவே நாம் இதை எழுதுகிறோம்.
இந்த செய்திகளை படிப்பவர்கள்
மற்றவர்களுக்கு -இந்த கல்வி வியாபாரிகளின்
எதிர்கால வாடிக்கையாளர்களான
பெற்றோர்களுக்கு - இதனை தெரிவித்தால் -
அதுவே ஒரு பெரிய சமூக சேவை ஆகும்.
செய்வீர்களா ?